23 June 2012

சகுனி - சலிப்பூட்டும் சூதாட்டம் ...


தொடர்ந்து தன்னுடைய படங்கள் வெற்றி பெற்று விட்டாலே படம் எப்படி இருந்தாலும் ஓடி விடும் என்ற நினைப்பு நடிகர்களுக்கு வந்து விடும் ... ஆறாவது படத்திற்கே ஆயிரம் ஸ்க்ரீன்களுக்கு மேல் ரிலீசாகியிருக்கும் சகுனியை பார்த்தால் கார்த்திக்கு அந்த நினைப்பு வந்து விட்டது போல தெரிகிறது ...

காரைக்குடியில் ஊருக்கே படியளக்கும் வீடு கமல் ( எ ) கமலக்கண்ணனின்
( கார்த்தி ) வீடு ... சப்வே கட்டுவதற்காக அந்த வீட்டை இடிக்க ஆணையிடுகிறது ரயில்வே நிர்வாகம் , அதை எதிர்த்து ரயில்வே மந்திரியிடம் மனு கொடுக்க சென்னை வருகிறார் கார்த்தி ... மனு கொடுத்த கையோடு கார்த்தி ஆட்டோ டிரைவர் ரஜினி ஏகாம்பரத்திடம் ( சந்தானம் ) தன் அத்தை பெண் ஸ்ரீதேவியை ( ப்ரனிதா ) டாவடித்த கதையை சொல்கிறார், இட்லிக்கடை ஆச்சியை ( ராதிகா ) கவுன்சிலராக்குகிறார் , பிறகு போனால் போகிறதென்று அவரை மேயராகவும் ஆக்குகிறார் , சும்மா கிடந்த பீடி சாமியாரை ( நாசர் ) சர்வதேச லெவலுக்கு உயர்த்துகிறார் , அவ்வப்போது வீட்டை காக்க என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று முதலமைச்சர் பூபதியிடம் ( பிரகாஷ்ராஜ் ) சவால் விடுகிறார் , எதிர்க்கட்சி தலைவர் பெருமாளை ( கோட்டா ஸ்ரீனிவாசராவ் ) தேர்தலில் ஜெயிக்க வைத்து முதல்வராக்குகிறார் ...

படம் முடியும் போது ஏதோ நியாபகம் வந்தது போல ஹீரோயினும் , வீட்டை இடிப்பதற்கு எதிரான ஆர்டரும் கார்த்தியின் கைகளுக்கு வந்து சேர்கின்றன. அப்பாடா ஒரு வழியாக படம் முடிந்தது என்று எந்திரித்தால் டில்லி அரசியலை சீர்படுத்த கார்த்திக்கு அழைப்பு வருகிறது ... பிரசிடன்ட் தேர்தலை போல  தலை சுற்றுகிறதா ? அதுவே சகுனியின் தூளான கதை ...

என்ன பாஸ் மத்திய அமைச்சரிடம் மனுவை கொடுத்து விட்டு எதற்கு கார்த்தி தேவையில்லாமல் ஸ்டேட் பால்டிக்சுக்குள் நுழைகிறார் என்றோ , ஒரு தனியாளாக கார்த்தியால் எப்படி ஒரு மாநிலத்தின் அரசியலையே புரட்டிப் போட முடியுமென்றோ நீங்கள் கேள்வி கேட்பவராக இருந்தால் சகுனி இஸ் நாட் யுவர் கப் ஆப் டீ ... அதே சமயம் லாஜிக்கெல்லாம் பாக்காம படத்துக்கு போனோமா , ஜாலியா என்ஜாய் பண்ணோமா என்று நினைப்பவர்களுக்கும் சகுனி இஸ் நாட் பிட் பார் தி பில் ஆக இருப்பதே படத்தின் பெரிய குறை ...


மாஸ் ஹீரோவிற்குரிய கரிஸ்மா கார்த்தியிடம் இருக்கிறது ... ஆனால் அது மட்டும் போதுமென அவர் நினைத்து விட்டதே துரதிருஷ்டம் ... படத்தில் நடிப்பிற்கு பெரிய ஸ்கோப் இல்லை , எனவே கார்த்தி படம் நெடுக சிரிக்கிறார் , சிரிக்கிறார் , சிரித்துக் கொண்டேயிருக்கிறார் ...ப்ரனிதா படத்தில் இருக்கிறார் அவ்வளவே ... குட்டைப் பாவாடையுடன் ஒரு பாடலுக்கு நடனமாடுவதோடு அவருடைய பணி முடிந்து விடுகிறது ... மாமா என்று அவர் கார்த்திக்கை பார்த்து குழட்டும் போது நமக்கு குமட்டுகிறது ...

சந்தானம் கார்த்தியுடன் சேர்ந்து நன்றாகவே காமெடி ஆட்டோ ஓட்டுகிறார் ... இருவரின் காம்பினேஷனும் மீண்டும் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது , ஆனால் இவர்களின் கமல் - ரஜினி காம்பினேஷன் ஒரு லெவலுக்கு மேல் எரிச்சலை தருகிறது ... இன்னும் எத்தனை படங்களுக்கு தான் சந்தானம் ஆபத்பாந்தவனாக இருப்பாரோ தெரியவில்லை ...

ராதிகா , நாசர் , ரோஜா இவர்களுள் ராதிகா மட்டும் கவனிக்க வைக்கிறார் ... கோ பாணியில் அரசியல் படம் என்று பார்த்தால் , அந்த படத்தை போலவே முதலமைச்சராக பிரகாஷ்ராஜ் , எதிர்க்கட்சி தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என காஸ்டிங்கும் அதைப் போலவே செய்திருக்கிறார்கள் , இதில் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை ...


மனசெல்லாம் நல்ல மெலடி , மற்றபடி இந்த படத்திற்கு இந்த இசை போதுமென்று ஜி.வி.பிரகாஷ்குமார் நினைத்து விட்டாரோ என்னவோ ... சந்தானத்திடம் சொல்வதன் வாயிலாக கார்த்தி தன் பிளாஸ்பேக்கை சுவாரசியமாக சொல்வது , சந்தானத்தின் காமெடி , சீனியர் நடிகர்களின் பங்களிப்பு , தூள் கதையை தூசி தட்டி எடுத்திருந்தாலும் இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் அதை சொன்ன இயக்குனரின் தைரியம் இவைகளையெல்லாம் சகுனியின் ப்ளஸ்களாக சொல்லலாம் ...

தொடர்ந்து சக்சஸ் கொடுக்கும் ஹீரோவின் கால்ஷீட் இருந்தாலே போதும் வேறொன்றும் தேவையில்லையென நினைத்து விட்ட அறிமுக இயக்குனர் சங்கர் தயாளின் எண்ணம் , வசனத்தில் மட்டும் அவிழ்க்க முடியாத முடிச்சுக்களை போடுவதே சுவாரசியம் என்று சொல்லிவிட்டு எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் அமைக்கப்பட்ட திரைக்கதை , கதை மட்டும் தான் சுட்டது என்று பார்த்தால் கோ , சிவகாசி , மக்கள் ஆட்சி உட்பட பல படங்களில் பார்த்து பழகிப் போன காட்சிகள் , படம் பார்க்க வருகிறவர்கள் எல்லாம் மங்குணிகள் என்ற நினைப்பில் பசிக்கு ஹோட்டலில் புகுந்து ஏதோ நாலு இட்லி , வடை சாப்பிடுவது போல ஹீரோ அவ்வளவு ஈசியாக கவுன்சிலர் , மேயர் , முதல்வர் என அவ்வளவு பேரையும் உருவாக்கிக் கொண்டே போவது இவைகளெல்லாம் ரசித்திருக்க வேண்டிய சகுனியின் சூதாட்டத்தை சலிப்படைய வைக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 39 


20 comments:

Philosophy Prabhakaran said...

சகுனி கார்த்தியின் ஆறாவது படம்...

மொத்தத்தில் இது ஒரு சராசரி படமென்று சொல்லலாம்... ப்ரணிதாவை எனக்கும் பிடிக்கவில்லை...

எனக்கென்னவோ சின்னச் சின்ன கேரக்டர்களில் நாசர் கேரக்டர் பிடித்திருந்தது... அதேபோல கோட்டா செய்யும் எக்ஸ்பிரஷன்ஸ், சவுண்ட் எஃபகட்ஸ் பிடித்திருந்தது...

கோவை நேரம் said...

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என இப்போவது கார்த்தி தெரிந்து கொள்ளட்டும்..

Yaathoramani.blogspot.com said...

பட விமர்சனம் அருமையாகத் தந்து எம்மை
போய் மாட்டிக் கொள்ளாமல்
காப்பாற்றியமைக்கு மனமார்ந்த நன்றி

subra said...

இன்னும் எத்தனை படங்களுக்கு தான் சந்தானம் ஆபத்பாந்தவனாக இருப்பாரோ தெரியவில்லை ...ithula irunthe teriyuthu nii oru naai nari endru,santhanam jokai parthaal tharkolai pannikalama endru thondrukirathu

sandhiya said...

Tamanna heroina iruntha film hit ayeirukum.

sandhiya said...

Tamanna heroina iruntha film hit ayeirukum.

Prem S said...

நல்ல விமர்சனம் தொடருங்கள்

ananthu said...

சகுனி கார்த்தியின் ஆறாவது படம்...
மொத்தத்தில் இது ஒரு சராசரி படமென்று சொல்லலாம்... ப்ரணிதாவை எனக்கும் பிடிக்கவில்லை...எனக்கென்னவோ சின்னச் சின்ன கேரக்டர்களில் நாசர் கேரக்டர் பிடித்திருந்தது... அதேபோல கோட்டா செய்யும் எக்ஸ்பிரஷன்ஸ், சவுண்ட் எஃபகட்ஸ் பிடித்திருந்தது...

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ... தவறு திருத்தப்பட்டது ...

ananthu said...

கோவை நேரம் said...
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என இப்போவது கார்த்தி தெரிந்து கொள்ளட்டும்..

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

Ramani said...
பட விமர்சனம் அருமையாகத் தந்து எம்மை
போய் மாட்டிக் கொள்ளாமல்
காப்பாற்றியமைக்கு மனமார்ந்த நன்றி


உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

subra said...
இன்னும் எத்தனை படங்களுக்கு தான் சந்தானம் ஆபத்பாந்தவனாக இருப்பாரோ தெரியவில்லை


உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

ananthu said...

sandhiya said...
Tamanna heroina iruntha film hit ayeirukum.


Dont know . Thanks ...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் சார் ! இதற்கு மேல் இந்த படத்திற்கு போகும் எண்ணமே இல்லை. நன்றி !

ananthu said...

திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல விமர்சனம் சார் ! இதற்கு மேல் இந்த படத்திற்கு போகும் எண்ணமே இல்லை. நன்றி !

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

Anonymous said...

irandarai mani neram kandippa padam kodukkaanuma oru mani nera padama edukakkoodatha?

cheena (சீனா) said...

அன்பின் அனந்து - விமர்சனம் நன்று. படம் பார்க்கும் எண்ணம் கொஞ்சம் இருந்தது - இப்ப சுத்தமா இல்ல

ananthu said...

Anonymous said...
irandarai mani neram kandippa padam kodukkaanuma oru mani nera padama edukakkoodatha?

nitchayam edukkalaam ... Thanks ...

ananthu said...

cheena (சீனா) said...
அன்பின் அனந்து - விமர்சனம் நன்று. படம் பார்க்கும் எண்ணம் கொஞ்சம் இருந்தது - இப்ப சுத்தமா இல்ல

உங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...

JR Benedict II said...

I think santhanam's name is Appathurai in saguni..

ananthu said...

ஹாரி பாட்டர் said...
I think santhanam's name is Appathurai in saguni..

Thanks for correction ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...