12 October 2013

நய்யாண்டி - NAYYAANDI - நாடகம் ...


னது இரண்டாவது படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனரும் , நடிப்பிற்க்காக தேசிய விருது பெற்ற நடிகரும் ஒன்று சேர்ந்தால்
எதிர்பார்ப்புக்கு பஞ்சமா இருக்கும் ? ஆனால் எதிர்பார்த்த ரசிகர்களை இருவருமாக சேர்ந்து நய்யாண்டி செய்து விட்டார்கள்
என்று தான் சொல்லத் தோன்றுகிறது ...

40 வயதை நெருங்கியும் திருமணமாகாத இரண்டு முதிர்கன்னர்களின் கடைக்குட்டி தம்பி சின்ன வண்டு ( தனுஷ் ) . மாமா பையனின்
( சூரி ) ஊர்த்திருவிழாவில் சின்ன வண்டு வன ரோஜாவை ( நஸ்ரியா ) சந்திக்க , வேலை வெட்டி இல்லாத ஹீரோக்களுக்கு என்ன பிறக்குமோ அது பிறக்கிறது . ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்களது காதல் கல்யாணத்தில் முடிய ஹீரோ தனது குடும்பத்தாரை எப்படி சமாளிக்கிறார் என்பதை நம்மை சிரிக்க வைக்கும் முயற்சியோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் சற்குணம் ...

தேசிய விருதுக்கு  பிறகு தொடர்ந்து சீரியசான படங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய நினைத்து விட்டார் போலும் . அவர் எண்ணப்படி ஜாலியான கேரக்டர் . கேசுவலாக செய்திருக்கிறார் . ஆனால் கதையை கொஞ்சம் சீரியசாகவே கேட்டிருக்கலாம் பாஸ் . சிறந்த நடிகர் கிடைத்துவிட்டார் என்று நாம் நெஞ்சை நிமிர்த்தும் வேளையில் சிவாவுக்கும் , சிவ கார்த்திகேயனுக்கும் போட்டியாக இதெல்லாம்  தேவையா என்று கேட்கத் தோன்றுகிறது ...

தனது நடிப்புத் திறமையை சினிமாவை  தாண்டியும் சமீபத்தில் நிரூபித்திருக்கும் நஸ்ரியா விற்கு இதில் படித்த  பல் டாக்டராக இருந்தாலும் பல்லிளிக்கும் தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப்பெண் பாத்திரம் . ஜெனிலியா போல  ஓவர் ஆக்ட் செய்து வெறுப்பெற்றாமல் அளவாக நடித்திருப்பதை பாராட்டலாம் ...

சந்தானம் இல்லாத  குறையை சூரியை வைத்து ஓரளவு சமாளித்திருக்கிறார்கள் . மற்ற நண்பர்களில் இமான் அண்ணாச்சி கவனிக்க வைக்கிறார் . அண்ணன்கள் ஸ்ரீமன் , சத்யன் இருவரில் தொப்பையை இறுக்கி சிவாஜி போன்ற முகபாவத்தில் ஸ்ரீமன் மட்டுமே சிரிக்க வைக்கிறார் . ஜிப்ரான் இசையில் இனிக்க இனிக்க , டெடி பீர் பாடல்கள் நன்றாக இருக்கின்றன . பின்னணி இசையில் எஸ்.ஏ.ராஜ்குமார் இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார் . காமெடி படமாக இருந்தாலும் குத்துவிளக்குகளுக்கு நடுவில் புகுந்து தனுஷ் , நஸ்ரியாவை காட்டும் ஷாட்டில் வேல்ராஜ் ஒளிர்கிறார் ...

கரண்ட் ட்ரெண்டிற்கு ஏற்றபடியான கதை , இரண்டு அண்ணன்களின் ஜொள்கலுக்கிடையே வழிந்தோடும்  இரண்டாம் பாதி , தனுஷ் - நஸ்ரியா ஜோடி , ஒளிப்பதிவு போன்றவை நய்யாண்டி யில் தர்பார் செய்கின்றன . இரண்டு சீரியஸான  ஆட்கள் சேர்ந்து ஜாலியான படம் பண்ண நினைத்ததில் தப்பில்லை . ஆனால் அதை சீரியசாக பண்ண வேண்டாமோ ? . நஸ்ரியாவை கவர தனுஷ் ஐடியா வாக என்னென்னமோ பண்ணி காமெடி என்ற பெயரில் கடிக்க அவரோ சப்பென்ற காரணத்திற்காக காதலில் விழுந்து " இதுக்கு ஏம்பா இத்தன நேரம் இழுத்தீங்க " என்று சொல்ல வைக்கிறார் ...

செண்டிமெண்டிற்காக  அப்பா நரேன் , தனுஷிற்காக இரண்டு சண்டை , க்ளைமாக்சில்  வந்து மிதி வாங்கும் வில்லன் , எதிர்பார்த்த படி வரும் அடுத்தடுத்த காட்சிகள் இப்படி நத்திங் நியூ இன் நய்யாண்டி . சற்குணத்தின் முதல் படம் களவானியில் இருந்த ப்ரெஷ்னெஸ் இதில் இல்லாமல் போனது கூட பரவாயில்லை , ஆனால் மொத்த படமும் ஏதோ நாடகம் பார்த்தது போன்ற உணர்வைக் கொடுத்தை தவிர்த்திருக்கலாம் ...

ஸ்கோர் :கார்ட் : 39



6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கே ஒரு வாரம் தான் ஓடும் போல...

கோவை நேரம் said...

படம் பார்க்குற ஆவலே போச்சு நையாண்டி ரிசல்டால்...

Manimaran said...


தேவையில்லாத பில்டப் கொடுத்தப்பவே தெரியும்...இப்போ மொத்தமா ஊத்திகிச்சா.. விமர்சனம் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

விமர்சனத்திற்கு நன்றி.

ராஜ் said...

என்னோட பொறுமையை ரொம்பவே சோதிச்ச படம்.. :(:(

மனோ சாமிநாதன் said...

படம் பார்க்க போகலாமா வேண்டாமா என்ற ஆலோசனையில் இருந்தோம். உங்கள் விமர்சனம் வேண்டாமென்றே சொல்லி விட்டது. சிறப்பான விமர்சனத்துக்கு இனிய நன்றி!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...