6 November 2013

பாண்டிய நாடு - PANDIYA NADU - விசுவ(ஷா)ல் ட்ரீட் ...

  


தீபாவளிக்கு  வந்திருக்கும் மூன்று படங்களுள் சுசீந்திரனின் பாண்டிய நாடு சென்சிபிலாக இருக்கும் என்ற எண்ணம் பொய்க்கவில்லை . கதை பிடித்ததால் விஷாலே படத்தை தயாரிக்க முன் வந்ததும் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது ...

பயந்தாங்கொள்ளி சிவகுமார் ( விஷால் ) அண்ணனையும் , நண்பனையும் கொன்றவர்களை பழிதீர்க்கும் வழக்கமான மதுரை மண் மணக்கும் படம் தான் பாண்டிய நாடு . ஆனால் அதை நேர்த்தியான திரைக்கதையால் சுவாரசியமாக்குகிறார் இயக்குனர் ...

ஒத்தையாளாக  நின்று ஊரையே அடிக்கும் விஷாலுக்கு இது  நல்ல ப்ரேக் . பயத்தில் திக்குவது , அடியாட்களை பார்த்து பம்முவது , பொய்யாக போன் பேசிக்கொண்டே காதலியை ரூட் விடுவது , குறிப்பாக பஞ்ச் டயலாக் எதுவும் பேசாதது என  இந்த வித்தியாச விஷால் வியக்க வைக்கிறார் . விஷாலை பிடிக்காதவர்களுக்கும் இந்த படத்தில்  அவரை பிடிக்கும் . கீப் இட் அப் ...


லக்ஷ்மி மேனனின் லக் இதிலும் தொடர்கிறது . பார்ப்பதற்கு  பக்கத்து வீட்டுப் பெண் போல இருந்தாலும் கண்களும் , உடல்வாகும் வசீகரிக்கின்றன . விஷாலின் நண்பனாக சில சீன்களே  வந்தாலும் விக்ராந்த் நல்ல தேர்வு . சூரி கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் ...

விஷாலை போல நடிப்பில் படத்தை தூக்கி நிறுத்தும் மற்ற தூண்கள் அப்பா பாரதிராஜா வும் , வில்லன் சரத் லோஹிதஸ்வா வும் . மகனை  கொன்றவனை பழி தீர்க்க துடிக்கும் அப்பாவாக  வரும் பாரதிராஜா நடிப்பிற்காக  பேசப்படுவார் . இயக்குனர்கள் தொடர்ந்து இவருக்கு அப்பா வேடமாக கொடுத்து முடக்காமல் இருத்தல் நலம் . கட்டுமஸ்தான் உடல்வாகு இல்லாவிட்டாலும் கண்களாலேயே மிரட்டுகிறார் வில்லன் சரத் ...

இமானின் இசையில் " ஒத்தக்கடை " , " பை பை " பாடல்கள் தாளம் போட வைத்தாலும் பை பை பாடல் ஸ்பீட் பிரேக்கர் . அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் யதார்த்தம் ...



இழவு சீனில் இருந்து படத்தை தொடங்குவது , வில்லன் , ஹீரோ கேரக்டர்களை மனதில்  பதிய வைத்தது , " தடையற தாக்க " பாணியில் ஹீரோ முகத்தை மூடிக்கொண்டு அடியாட்களை அடித்தாலும் அதை விறுவிறுப்பாக படமாக்கியது , ஹீரோ வில்லனை பழிவாங்குவது நூற்றாண்டு கால சினிமா என்றாலும் அதை டீட்டைளிங்கோடு கொடுத்தது என பாண்டிய நாட்டில் பிடிக்கும் விஷயங்கள் நிறைய ...

வலுவான அண்ணன் கதாபாத்திரத்துக்கு வலுவில்லாத ஆளை தேர்வு செய்தது , முகத்தை மூடிக்கொண்டு அடித்தாலும் சொந்த வண்டியின் நம்பர் பிளேட்டை மூடாமல் போகும் லாஜிக் சொதப்பல் , ஊரை விட்டு ஓடிப்போன விக்ராந்திற்கு என்ன  ஆனது என்பதை சொல்லும் சினிமாத்தனமான ப்ளாஷ்பேக் போன்றவை பாண்டிய நாட்டிற்கு நேர்ந்த சோதனைகள் ...

மதுரையையே கைக்குள் வைத்திருக்கும் தாதா , அண்ணனை கொன்றதற்காக  அவனை பழி வாங்க பொங்கியெழும் பயந்தாங்கொள்ளி ஹீரோ , தாதாவிற்கு உதவியாக மினிஸ்டர் , சென்டிமென்ட் அப்பா இப்படி நிறைய வழக்கமான வழக்கங்கள் படத்தில் இருந்தாலும் சுசீந்திரனின் நேர்த்தியான திரைக்கதை . மதியின் நுட்பமான ஒளிப்பதிவு , விஷாலின் நடிப்பு இவையெல்லாம் சரியான விகிதத்தில் சேர்ந்ததால் பார்ப்பவர்களுக்கு பாண்டிய நாடு விசுவ(ஷா)ல் ட்ரீட் ...

ஸ்கோர் கார்ட் : 43



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...