18 May 2015

புறம்போக்கு - PURAMBOKKU - மேம்போக்கு ...


ரு படம் ஹிட் அடித்தவுடன் அடுத்த படத்துக்கு பறக்காமல் தனக்கு ஏற்ற கதைக்களன் கிடைக்கும் வரை பொறுமையாக இருக்கும் சில இயக்குனர்களுள் ஒருவர் எஸ்.பி.ஜனனாதன் . அவர் ஆர்யா , விஜய் சேதுபதி , ஷாம் என மூன்று ஹீரோக்களுடன் கை கோர்த்திருக்கும் படம் புறம்போக்கு என்கிற பொதுவுடமை . ஆனால் அனைவருக்கும் புறம்போக்கு பிடிக்குமா ? பார்க்கலாம் ...

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி சாரி தீவிர கம்யூனிசவாதி பாலு
( ஆர்யா ) ,  அதை கலாசி ( விஜய் சேதுபதி ) எம லிங்கம் (  நல்ல  பெயர் பொறுத்தம் ) மூலம் நிறைவேற்ற துடிக்கும் காவல் அதிகாரி மெக்காலே
( ஷாம் ) மூவருக்குமிடையேயான போராட்டமே புறம்போக்கு . கேட்டவுடன் கவரும் ஒன்லைனை வைத்துக்கொண்டு அதை எக்ஸிக்யூட் செய்ய முடியாமல் திணறியிருக்கிறார் இயக்குனர் ...

உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு அவ்வப்போது இயக்குனர் சொல்லிக் கொடுத்த கம்யூனிச சித்தாந்தங்களை வசனங்களாய் உதிர்ப்பதை தவிர ஆர்யாவுக்கு பெரிய வேலை எதுவுமில்லை . மீகாமன் னில் சிங்கிள் ஹீரோவாக வந்து சிலாகிக்க வைத்தவர் இதில் கூட்டத்தோடு வந்து ஸ்கோர் செய்ய மறுக்கிறார் . பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் . ஷாம் நேர்மையான காவல் அதிகாரி மெக்காலே வாக பெரிதாக மெனக்கெடாமல் இயல்பான நடிப்பில் கவர்கிறார் . ஆல் தி பெஸ்ட் . இ.தா.ஆ.பா வின் பார்ட் 2 போல குடிகாரன் கேரக்டராக இருந்தாலும் தன் உடல்மொழியால் அதையும் ரசிக்க வைக்கிறார் விஜய் சேதுபதி . தூக்கு போடும் பரம்பரை தொழிலை வெறுக்கும் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் தமிழுக்கு புதுசு . பாலுவை இவர் காப்பாற்ற நினைப்பது குயிலி ( கார்த்திகா ) யின் காதலுக்காகவா ? அல்லது கம்யூனிச கருத்துக்களால் கவரப்பட்டா  ? என்பது இயக்குனருக்கே வெளிச்சம் !


பாடல்கள் ஏற்கனவே நேர்கோட்டில் செல்லும் படத்துக்கு  மேற்கொண்டு வரும் தடை . ஜெயிலில் ஷாம் - ஆர்யா இடையேயான வசனங்கள் ஷார்ப் . தன்னுடைய கம்யூனிஸ கருத்துக்களை திணிப்பது போல தோன்றாமல் படத்தோடு ஒன்றி வர வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் . ஆனால் பாலுவின் தரப்பு நியாயத்தை சொல்வதற்காக காட்டப்படும் லடாக் - ராஜஸ்தான் சீன்கள் சுத்த சொதப்பல் . தோழர் என்று சொல்லிக்கொண்டு வரும் கார்த்திகா & கோ நாட் இன்ட்ரெஸ்டிங் ...

ரஷ்யா , சீனா போன்ற நாடுகளிலேயே கம்யூனிஸம் காலாவதியாகி விட்ட  வேளையில் கம்யுனிஸவாதியாக ஹீரோவை காட்டும் இயக்குனரின் தைரியத்தை பாராட்டலாம் . ஆனால் அதை வெறும் வசனங்களாகவே நிரப்பியிருப்பது துரதிருஷ்டம்  . அதுவும் ஆர்யாவின் தூக்குக்கு காரணமான சீன்களை நாடகத்தனமாக எடுத்திருப்பது ஏமாற்றம் . ஏழைகளுக்கு கை கொடுக்கும் பங்காளிகளான கம்யூனிஸ்டுகளே தொழிலாளி எமலிங்கத்தை கொல்ல  நினைப்பதும் , காரியத்தை சாதிக்க குயிலி எமலிங்கத்தை ஏமாற்ற நடிப்பதும்  படத்தின் ஓட்டைகள் . இந்த காரணங்களால் ஆர்யாவின் மேல் பரிதாபம் வருவதற்கு பதில் நமக்கு கொட்டாவி தான் வருகிறது ...

தூக்கில் போடும் தொழிலாளியின் உளவியல் ரீதியான பிரச்சனைகளை அலசி இருப்பதும் , மூவரையும் சமமமான விதத்தில் கையாண்டிருப்பதும் , ஜெயிலில் இருந்து  ஆர்யா தப்பிக்கும் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கியிருப்பதும் மட்டுமே படத்துக்கு ஆறுதல் . மற்றபடி ஆர்யா - விஜய்சேதுபதி கூட்டணியின் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் கம்யூனிஸ கொள்கைகளை வைத்து அழுத்தம் இல்லாமல் மேம்போக்காக எடுக்கப்பட்டிருக்கும் படம் புறம்போக்கு...

ஸ்கோர் கார்ட் : 40   

2 comments:

Raja said...

//பாலுவை இவர் காப்பாற்ற நினைப்பது குயிலி ( கார்த்திகா ) யின் காதலுக்காகவா ? அல்லது கம்யூனிச கருத்துக்களால் கவரப்பட்டா ? என்பது இயக்குனருக்கே வெளிச்சம் !//
இந்த கேள்விக்கு படத்திலே விடை உள்ளது. எமலிங்கம் தான் இன்னொருவரை கொலை செய்ய முடியாது என்று தான் பாலுவை தூக்கில் போட முதலில் மறுப்பான். குயிலி வந்து பாலுவை தூக்கில் போடாமல் காப்பாற்றி விடலாம் என்ற உடனே தான் அவன் தூக்கில் போட போவது போல அவர்களுக்கு உதவுவான். முதலில் அவர்களுக்கு தூக்கு தேதிக்கு முன்பே பாலுவை காப்பாற்றுவது தான் திட்டம். எமலிங்கம் போன்ற சாதாரண மனிதனுக்கு ஒரு அழகான பெண் தானாக வந்து பழகினால் காதல் வருவது இயல்பு தான். ஆனாலும் எமலிங்கம் குயிலிக்கு பாலு மேல் காதல் இருக்கிறது என்ற எண்ணமும் இருக்கிறது.

Raja said...

//ஆர்யாவின் தூக்குக்கு காரணமான சீன்களை நாடகத்தனமாக எடுத்திருப்பது ஏமாற்றம்//
Very true :(

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...