அஜித்
அமராவதியில் அறிமுகம் ஆகி ஆசைக்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி காதல் கோட்டையில் தன் வெற்றிக் கொடியை நட்டு , வாலிக்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்க்களப்படுத்தி வருபவர் அஜித். இவரின் மங்காத்தா ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை. இவரின் மேல் ரசிகர்களுக்கு இருக்கும் பேய்த்தனமான அன்பு தான் வேதாளம் என்று பேர் வைத்தாலும் டீசருக்கே யூ டியூபில் 48 லட்சம் ஹிட்ஸ்களும் , எல்லா படத்திற்கும் ஒபெனிங்கில் தல யாகவும் இவரை வைத்திருக்கிறது ...
சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் வந்தவர் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்ததோடு 20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் 50க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் . சிவாஜி, கமல் , விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித் இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர் படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது . அதனால் தான் தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர் படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ...
முன்னாள் முதல்வர் அமர்ந்திருந்த மேடையிலேயே தனக்கு சரியென பட்டதை தைரியமாக சொன்னது , விளம்பர படங்களில் நடிக்காதது , தான் நடிக்கும் படங்கள் உட்பட எந்த சினிமா விழாக்களுக்கும் போகாதது என்று ஒரு கோடு போட்டுக்கொண்டு அதற்குள் தனியாக இருப்பது போல பட்டாலும் அவர் ரசிகர் மன்றங்களை கலைக்க சொல்லியும் அவர் கிழித்த கோட்டை தாண்டாத ரசிகர்கள் கிடைத்தது அவரது வரம் . பீக்கில் இருக்கும் போதே டக்கென்று ரேசிங் கிளம்புவது , செட்டில் உள்ள அனைவருக்கும் சுவையாக பிரியாணி சமைத்து தருவது , சின்ன நடிகர் அப்புக்குட்டி யை நிற்க வைத்து விதவிதமாக போட்டோ எடுப்பது என்று தல செய்யும் நிறைய விஷயங்கள் அவரது தனித்துவம் . அதனால் தான் நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் தன் முயற்சி, உழைப்பு , துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் அசல் நாயகனாகவே நம் கண் முன் தெரிகிறார் அஜித் ...
22 ஆண்டு கால கலை வரலாற்றில் முதல் படம் அமராவதி தோல்விப் படம் . மூன்றாவது படமான ஆசை பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் உல்லாசம் , ராசி உட்பட ஐந்து தோல்வி படங்கள். வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருடம் நடித்திருப்பார்களா என்பது சந்தேகமே . ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம் அதிகமாக கோபப்படுகிறார் என்ற சர்ச்சையும் இருந்தது. இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி நடத்த காட் பாதர் யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம் . ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு , ஆர்யா போன்ற சம கால நடிகர்களே இவரை காட் பாதர் என்று சொல்வதும் , சமீபமாக வரும் எல்லா படத்திலும் ஏதோ ஒரு வகையில் இவரது பெயர் இடம்பெறுவதும்
( மிக சமீபத்திய உதாரணம் 10 எண்றதுக்குள்ள ) தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ...
( மிக சமீபத்திய உதாரணம் 10 எண்றதுக்குள்ள ) தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ...
சிவாஜி , ரஜினி , கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்திருக்கும் அஜித் அதில் வாலி , வரலாறு , வில்லன் , பில்லா உட்பட பெரும்பாலான படங்களில் வெற்றி பெற்றிருக்கிறார் . விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் . அதில் சரண் , எஸ்.ஜே.சூர்யா , துரை போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் . ரெட் , ஜனா , ஆழ்வார் போன்ற புதியவர்களின் படங்கள் காலை வாரினாலும் முகவரி , கிரீடம் போன்றவை அஜித்துக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தன . விஜய் , சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை , அவர் உடல் எடையை கவனிப்பதில்லை , ரொம்ப வருடங்களாக கெட்டப்பை மாத்தாமல் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே இருக்கிறார் இப்படி சில குறைகள் அவரை பற்றி சொன்னாலும் அவர் தான் எங்க " தல " என்கிறார்கள் ரசிகர்கள் ...
முன்னாள் முதல்வர் அமர்ந்திருந்த மேடையிலேயே தனக்கு சரியென பட்டதை தைரியமாக சொன்னது , விளம்பர படங்களில் நடிக்காதது , தான் நடிக்கும் படங்கள் உட்பட எந்த சினிமா விழாக்களுக்கும் போகாதது என்று ஒரு கோடு போட்டுக்கொண்டு அதற்குள் தனியாக இருப்பது போல பட்டாலும் அவர் ரசிகர் மன்றங்களை கலைக்க சொல்லியும் அவர் கிழித்த கோட்டை தாண்டாத ரசிகர்கள் கிடைத்தது அவரது வரம் . பீக்கில் இருக்கும் போதே டக்கென்று ரேசிங் கிளம்புவது , செட்டில் உள்ள அனைவருக்கும் சுவையாக பிரியாணி சமைத்து தருவது , சின்ன நடிகர் அப்புக்குட்டி யை நிற்க வைத்து விதவிதமாக போட்டோ எடுப்பது என்று தல செய்யும் நிறைய விஷயங்கள் அவரது தனித்துவம் . அதனால் தான் நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் தன் முயற்சி, உழைப்பு , துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் அசல் நாயகனாகவே நம் கண் முன் தெரிகிறார் அஜித் ...
அறிமுகம் : அமராவதி
முதல் ஹிட் : ஆசை
ப்ரேகிங் பாயிண்ட் : வாலி
தல அவதாரம் : தினா
அறிமுக இயக்குனர் : செல்வா
ஃபேவரட் இயக்குனர் : சரண் , இப்போது சிறுத்தை சிவா
100 க்ரோர் கிளப் : மங்காத்தா , ஆரம்பம்
அடுத்த ரிலீஸ் : வேதாளம்
அடுத்த பதிவில் விஜய் ...